Sathya Narayana Pooja
Sri Sathyanarayana Swamy is the one who makes everyone happy. He is an incarnation of Sri Maha Vishnu. He removes all the sufferings of the people and makes them live happily. According to Skandam, Sathyanarayana Vratam should be observed. It is customary to perform this puja every month on the full moon day. If this is not feasible, one can perform the ritual on Amavasya, Ashtami, Ekadasi, Sunday, Monday, Friday, Saturday, or whenever the moon is favorable in their horoscope. Swamy Sathyanarayanar’sleelas and stories should be read after the puja, and then prasadam should be offered to everyone. The most important aspect of observing it is to do so with devotion.
ஸ்ரீ சத்யநாராயண ஸ்வாமி அனைவரையும் சந்தோஷமாக வைப்பவர். ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம். மக்களின் சகல துன்பங்களையும் போக்கி இன்புற்று வாழவைப்பவர். சத்யநாராயண விரதம் அனுஷ்டிப்பது உசிதம் என்கிறது ஸ்காந்தம். இப்பூஜையை மாதந்தோறும் பௌர்ணமி அன்று அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது. இயலாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி மற்றும் அவரவர் ஜாதகத்தில் சந்திரன் என்று அனுகூலமாக உள்ளதோ அன்று அனுஷ்டிக்கலாம். பூஜையின் முடிவில் சத்யநாராயணர் லீலைகள் கதைகள் வாசிப்பது உண்டு பின் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்க வேண்டும். முக்கியமாக பக்தியுடன் அனுஷ்டிப்பது நன்மையை தரும்.