Basic things you need to know and follow in our daily life.
வாழக்கைக்குத் தேவையான மற்றும் பின்பற்றவேண்டிய அடிப்படை விஷயங்கள்.
-
பிராமணத்தன்மை
பிராமனத்தன்மை ஒருவரின் பிறப்பினால் மட்டும் ஏற்படுவது அல்ல வாழ்க்கை முறையினாலும் ஏற்படுவது உண்டு. பொதுவாக ஒரு பிராமண புருஷனுக்கும் பிராமண ஸ்திரிக்கும் பிறந்தவர்களே பிராமணர் என்று கருதப்படுவார்கள். ஆனால் இதில் சில விதிவிலக்குகள் உண்டு. சிலர் பூர்வஜன்ம தொடர்பினாலும் பூர்வஜன்ம தபசின் பலனாகவும் வேறு குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் பிராமணத்தன்மையை அடைவார்கள். அது மிக மிக அரிது, ஆனால் வாய்ப்புக்கள் உண்டு.
பிராமணத்வத்தை பிரகாசிக்க செய்ய 40 சமஸ்காரங்கள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இந்த 40 சமஸ்காரங்களில் 14 எல்லோருக்கும் பொதுவானவை. அதாவது நியத சமஸ்காரங்கள் எனப்படும்.
அவை 1) கர்பாதானம் 2) பும்ஸுவனம் 3) சீமந்தோநயனம் 4) ஜாதகர்மா 5) நாமகரணம் 6) அண்ணப்பராசனம் 7) சௌளம் 8) உபநயனம். 9 to 12) வேத வ்ரதம் 13) சமாவர்த்தனம் 14) விவாகம்.
இதில் விவாகம் மட்டும் நியத சமஸ்காரத்தில் வராது, காரணம் ஒருவன் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்துவிட்டால் அவனுக்கு விவாகம் என்ற சமஸ்காரம் கிடையாது.
-
வேதங்களும் அதன் சூத்திரங்களும்.
வேதங்கள் 4 அவை ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வ வேதம்.
ரிக் வேதத்திற்கு ஆஷ்வலாயணம், கௌஷீதகம் என்னும் 2 சூத்திரங்கள் உண்டு.
யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என இரண்டு பிரிவுகள் உண்டு.
கிருஷ்ண யஜுர் வேதத்திற்கு போதாயானம், ஆபஸ்தம்பம், பாரத்வாஜம், சத்யாஷாடம், வைக்கானஸம் என்று ஐந்து சூத்திரங்கள் உண்டு.
சுக்ல யஜுர் வேதத்திற்கு காத்யாயனம் என்று 1 சூத்திரம் மட்டும் உண்டு.
சாம வேதத்திற்கு திராஹ்யாயணம், ஜயமிநீயம் என்று இரண்டு சூத்திரங்கள் மட்டும்.