ஸ்ரார்தம் என்றால் என்ன?
வாழ்ந்து மறைந்தத நம் முன்னோர்கள் பிரேத நிலையில் சில காலம் இருந்து பின் தங்கள் பிள்ளைகளால் செய்யப்படும் கர்மாவின் பலனை பெற்று பிரேத நிலை நீங்கி பித்ரு நிலையை அடைந்து பித்ரு லோகத்தில் வசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பிதிருக்களுக்கு வருடம் தோறும் நாம் செய்யும் கர்மாவே ஸ்ரார்தம் எனப்படும்.
தற்காலத்தில் அவரவர் சௌகரியத்திற்கு ஏற்ப ஸ்ரார்தத்தை அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது. சிலர் ஸ்ரத்தையோடு நியம்மங்களை கடைபிடித்தும் செய்கின்றனர். தேவகாரியங்களை விட பித்ரு காரியங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்வாமிக்கு முடி கட்டி வேண்டிக்கொண்டு அந்த காரியம் நடந்த பின் வேண்டுதலை செலுத்தலாம் ஆனால் பித்ரு காரியம் அவ்வாறல்ல எந்த தேதியில் திதி வருகிறதோ அந்த தேதியில் பித்ரு காரியம் செய்தாக வேண்டும். பிதிருக்களின் அனுக்கிரகம் கிடைத்தால் ஒருவருக்கு சகலமும் தடையின்றி கிடைக்கும்.